ஆண்டிப்பட்டி தேர்தல்: காங்., தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு
சென்னை:
ஆண்டிப்பட்டி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று காங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன.
ஆண்டிப்பட்டி, வாணியம்பாடி, சைதாப்பேட்டை ஆகிய 3 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் தயாரித்ததில்முறைகேடுகள் நடந்திருப்பதாக திமுக புகார் அளித்திருந்தது.
இதையடுத்து அங்கு விசாரணை நடத்திய தலைமை தேர்தல் கமிஷன், சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடிதொகுதிகளில் மட்டும் இடைத் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிட்டது.
ஆனால் ஆண்டிப்பட்டியில்தான் மற்ற 2 தொகுதிகளைவிட ஏராளமான அளவில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறிஅதிமுக தவிர மற்ற அனைத்து எதிர்க் கட்சிகளும் தேர்தல் கமிஷனிடம் மீண்டும் புகார் கூறின.
இந்நிலையில் காங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நேற்று (சனிக்கிழமை) இரவு அறிவித்தன.
ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தல் முறையாகவும் சுமூகமாகவும் நடைபெற வாய்ப்பில்லை என்று கருதுவதாகவும்,இதனால்தான் அங்கு தாங்கள் போட்டியிடப் போவதில்லை என்று அந்தக் கட்சிகள் தெரிவித்தன.
ஆண்டிப்பட்டியில் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியிலும், 3வது அணியை அமைக்கும் முயற்சியிலும்இக்கட்சிகள் தோல்வியடைந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications