நெல்லையில் ரூ.20 லட்சம் மதிப்பு ஐம்பொன் சிலைகள் கொள்ளை
திருநெல்வேலி:
திருநெல்வேலி அருகே பழமையான பெருமாள் கோவிலில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 5 ஐம்பொன் சிலைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை அருகே நரசிங்கநல்லூரில் பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. நேற்று(திங்கட்கிழமை) அதிகாலையில் கோவிலுக்கு பூஜை செய்ய பூசாரி சென்ற போது, மூலவர் அறைக்கதவுஉடைக்கப்பட்டு சிலை திருடப்பட்டது தெரிய வந்தது.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஒன்றரை அடி உயரமுள்ள சீனிவாச பெருமாள் சிலை, ஒண்ணேகால் அடி பூமி சிலை,நீலா சிலை, சக்கரத்தாழ்வார் சிலை, விஸ்வக்சேனர் சிலை ஆகிய 5 சிலைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மேலும் அம்மனுக்கு அணிவிக்கப்படும் இரண்டு தங்கத்தாலிகள், இரண்டு தங்கப் பொட்டுகள் ஆகியவையும்கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 20 லட்சம்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் கொள்ளையர்களை தீவிரமாகதேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் தொடர்ந்து 6வது முறையாக கோவில் சிலைகள்கொள்ளையடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications