தீவிரவாதிகள் தாக்குதல்: ஜனாதிபதியை சந்திக்கிறார் வாஜ்பாய்
டெல்லி:
கொல்கத்தாவில் அமெரிக்க மையத்தின் மீது நடந்த தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனை சந்திக்கிறார் பிரதமர் வாஜ்பாய்.
மேலும் இத் தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் ஆசிப் ராஸா கமாண்டோ படைக்கு பாகிஸ்தானின்உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. தான் அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, 20 பேர் கொண்ட தீவிரவாதிகள் பட்டியலைக் கொடுத்து அவர்களை தன்னிடம் ஒப்படைக்குமாறுபாகிஸ்தானிடம் இந்தியா கோரி வரும் நிலையில், இந்தப் புதிய தாக்குதல் நடந்துள்ளது.
எல்லையில் இரு தரப்பினரும் படைகளைக் குவித்து வைத்துள்ள நிலையில் தீவிரவாதிகளின் இந்தத் தாக்குதல்இந்திய குடியரசு தினத்தை சிதைப்பதற்காகத் தான் நடத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு கருதுகிறது. இந்தியாவும்,அமெரிக்காவும் நெருங்கி வருவதை விரும்பாத பாகிஸ்தானின் உளவுப் பிரிவுக்கும் இத் தாக்குதலில்தொடர்பிருக்கலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது.
இதையடுத்து நாடு முழுவதும் ரெட் அலர்ட் எனப்படும் உயர் மட்ட பாதுகாப்பை மேற்கொள்ள அனைத்து மாநிலஅரசுகளுக்கும் மத்திய அவசர சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து குடியரசு தினத்தன்று செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்தும், தீவிரவாதிகள்தாக்குதலுக்கு பதிலடி தருவது குறித்தும் ஜனாதிபதியுடன் ஆலோசனை நடத்த பிரதமர் வாஜ்பாய் முடிவுசெய்துள்ளார்.
இதற்காக இன்று மாலையில் அவர் ஜனாதிபதியை சந்திக்கிறார்.
பாகிஸ்தான் கண்டனம்:
இதற்கிடையே கொல்கத்தாவில் நடந்த அமெரிக்க மையத்தின் மீதான தாக்குதலை பாகிஸ்தான் கண்டிப்பதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத்தொடர்பிருப்பதாக இந்தியா கூறுவது அடிப்படையே இல்லாத குற்றச்சாட்டு என்றார்.
அமெரிக்க விசாரணை இல்லை:
இந் நிலையில் இத் தாக்குதல் குறித்து அமெரிக்காவின் எப்.பி.ஐ. அமைப்பு விசாரிக்காது என மேற்கு வங்கமுதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா கூறினார்.
இத் தாக்குதல் குறித்து மத்திய உளவுப் பிரிவினரும் மாநில போலீசாரும் விசாரணை நடத்துவார்கள். இதில்வெளிநாட்டு உதவி தேவை இல்லை என்றார்.
எப்.பி.ஐ.-சி.பி.ஐ. தலைவர்கள் ஆலோசனை:
இதற்கிடையே இன்று டெல்லி வந்த அமெரிக்காவின் எப்.பி.ஐ. தலைவர் ராபர்ட் முல்லர், சி.பி.ஐ. அமைப்பின்தலைவர் சர்மாவுடன் பல மணி நேரம் ஆலோசனை நடத்தினார். தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவும்அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
அப்போது கொல்கத்தா தாக்குதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னதாக உள்துறை அமைச்சர் அத்வானிமுல்லருடன் தொலைபேசியில் இந்தத் தாக்குதல் குறித்து விவாதித்தார். பிரதமர் வாஜ்பாய், அத்வானியை நேரில்சந்தித்துப் பேச உள்ளார் முல்லர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications