ஜெ. இன்னும் குற்றவாளி தான்: சுப்பிரமணியம் சுவாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் டான்சி வழக்கு நிலுவையில் இருக்கும் வரை,அவர் அரசுப் பதவிகளில் அமரக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக ஜனதாக் கட்சி தலைவர்சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.

டான்சி வழக்கில் ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சுவாமி உட்பட 5 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை ஜெயலலிதா அரசு பதவி வகிக்கத் தடை விதிக்கவேண்டும் என்று சுவாமி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டஅனைவருக்கும் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை நிருபர்களிடம் இன்று (புதன்கிழமை)சுவாமி கூறியதாவது:

ஜெயலலிதா மற்றும் அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்க உச்ச நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. 1976ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பின்படி பார்த்தால், இந்த உத்தரவால்ஜெயலலிதா இன்னும் குற்றவாளியாகவே கருதப்படுகிறார்.

எனவே இந்த வழக்கு முடியும் வரை ஜெயலலிதா அரசு பதவிகள் ஏற்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழக அரசு அநாவசியமாகக் கால தாமதம் செய்து வருகிறது. இதற்காகதமிழக முதல்வர் பன்னீர்செல்வம் தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மற்ற இரண்டு தொகுதிகளிலும் முறைகேடு நடந்துள்ளதால் அந்த தொகுதிகளில் தேர்தலை தள்ளி வைத்து விட்டு,ஆண்டிப்பட்டி தேர்தலை மட்டும் நடத்துவது சரியானதல்ல.

இரண்டு தொகுதிகளிலும் முறைகேடு செய்தவர்கள், ஆண்டிப்பட்டியில் முறைகேடு செய்யாமல்இருந்திருப்பார்களா? அந்தத் தொகுதியில் முறைகேடு நடக்கவில்லை என்று சொல்வதை யாராலும் நம்ப முடியாது.

விடுதலைப்புலிகளை ஆதரித்தால் திமுக கண்டிப்பாக ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றி பெற முடியாது. தேர்தலில்திமுகவை ஆதரிப்பது பற்றி நான் யோசனை செய்துதான் என் முடிவைக் கூறமுடியும் என்று சுவாமி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+