நெல்லை, முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரம் குறைப்பு
சென்னை:
சென்னை-திருநெல்வேலி (நெல்லை எக்ஸ்பிரஸ்) மற்றும் சென்னை-தூத்துக்குடி (முத்துநகர் எக்ஸ்பிரஸ்) ஆகியரயில்களின் பயண நேரம் இன்று (வியாழக்கிழமை) முதல் குறைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை எழும்பூரிலிருந்து மாலை 6.30 மணிக்குக் கிளம்பும் முத்துநகர் எக்ஸ்பிரஸ், மறுநாள் காலை 7.30மணிக்குச் சென்று சேருவதற்குப் பதிலாக 7 மணிக்கே தூத்துக்குடிக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.
அதேபோல் தூத்துக்குடியிலிருந்து மாலை 5.30 மணிக்குப் பதிலாக 6.45 மணிக்குக் கிளம்பும் அதே எக்ஸ்பிரஸ்,மறுநாள் காலை 6.45 மணிக்குப் பதிலாக 7.40 மணிக்குச் சென்று சேரும்.
சென்னையிலிருந்து இரவு 7 மணிக்குக் கிளம்பும் நெல்லை எக்ஸ்பிரஸ் இன்று முதல் இரவு 7.15க்குக் கிளம்பும். இதுமறுநாள் காலை 8.20 மணிக்கே திருநெல்வேலி சென்று சேரும்.
பெங்களூர்-தூத்துக்குடி பயண நேரமும் குறைப்பு
பெங்களூரிலிருந்து இரவு 9.15 மணிக்குப் பதிலாக இரவு 9.50 மணிக்குக் கிளம்பும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ்,மறுநாள் பகல் 12.15 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும்.
அதேபோல் தூத்துக்குடியிலிருந்து மாலை 3.40 மணிக்குக் கிளம்பும் அதே ரயில், மறுநாள் காலை 6.55 மணிக்குப்பதிலாக 6.40க்கே பெங்களூர் வந்து சேரும் என்று தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications