அதிமுக-பாஜக நெருங்குகின்றன: இளங்கோவன்
கோயம்புத்தூர்:
வாக்களர் பட்டியலில் முறைகேடு நடந்திருந்தும் ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலை மத்திய அரசு நடத்துவதன்மூலம் பாஜகவும், அதிமுகவும் நெருங்கி வருகின்றன என்பது தெளிவாகிறது என தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் கூறினார்.
கோயம்புத்தூரில் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டை, வாணியம்பாடித் தொகுதிகளை விட ஆண்டிப்பட்டியில் தான் அதிக முறைகேடு நடந்துள்ளது.ஆனால் ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தலை நடத்தச் செய்திருக்கிறது மத்திய அரசு. இதனால், பாஜகவும்,அதிமுகவும் விரைவில் கூட்டணி அமைக்கலாம்.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலால் தமிழகத்தில் பெரிதாக ஒன்றும் மாற்றம் இருக்காது.
ஆண்டிப்பட்டியில் ஜனநாயகத்துக்கு விரோதமாக தேர்தல் நடைபெறுவதாலும், அங்கு நேர்மையான தேர்தல்நடைபெறாது என்பதாலேயே காங்கிரஸ் கட்சி தேர்தலைப் புறக்கணித்தது.
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ண மூர்த்தி எங்களைத் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்கவில்லை.நாங்கள் இந்தத் தேர்தலில் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை.
தமாகாவை, காங்கிரஸில் இணைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருக்கிறது. விரைவில் தமாகாவும்காங்கிரஸில் இணையும் என்று இளங்கோவன் கூறினார்.
இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கும் பேச்சுவார்த்தையை நடத்துவதற்குஇந்தியாவில் நடத்த மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் நடத்த அனுமதிக்கக் கூடாதுஎன்று இளங்கோவன் கூறினார்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications