குஜராத்தில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் பீதி
பூஜ்:
குஜராத்தின் பூஜ் நகரில் சரியாக ஒரு வருடம் கழித்து நேற்று (சனிக்கிழமை) இரவு மீண்டும் நிலநடுக்கம்ஏற்பட்டதையடுத்து மக்கள் பீதியில் உறைந்தனர்.
உலகையே உலுக்கிய இந்தத் துயரச் சம்பவத்தின் முதலாவது ஆண்டை நினைவுகூர்ந்து கொண்டிருந்தனர்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்.
பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளையும் சடங்குகளையும் கண்ணீருடன் நேற்று அவர்கள் நடத்தி வந்தனர். குஜராத்முதல்வர் நரேந்திர மோடியும் பூஜ் நகருக்கு வந்து பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுமாலையில்தான் கிளம்பிச் சென்றார்.
இந்நிலையில் நேற்று இரவு 8.47 மணிக்கு பூஜ் நகரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பெரும்பீதியடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
ரிச்டர் அளவுகோலில் 3.6 என்று பதிவாகியிருந்த இந்த நிலநடுக்கம், பூஜ் நகரை மையமாகக் கொண்டுதான்ஏற்பட்டது.
ஒரு சில வினாடிகளே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து மக்கள்நிம்மதியடைந்தனர்.
அதன்பின் சரியாக மூன்றரை மணி நேரம் கழித்து (12.03 மணிக்கு) மீண்டும் நிலம் அதிர்ந்தது. இதனால் பூஜ்மக்களின் பீதி அதிகரித்தது.
இப்போது இந்த நிலநடுக்கத்தில் அளவு 3.5ஆக ரிச்டர் அளவுகோலில் பதிவாகி இருந்தது.
இம்முறையும் சில வினாடிகளே இந்த நிலநடுக்கம் நீடித்தது. ஆள் சேதமோ பொருட்சேதமோ இதனால்ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகப் பல்வேறு முகாம்களை அமைத்துபணியாற்றி வந்த பல்வேறு அமைப்பினரும்கூட, பீதியில் வீதிக்கு ஓடிவந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications