பொறுப்பில்லாமல் பேசுகிறார் இளங்கோவன்: இல. கணேசன் பாய்ச்சல்
சென்னை:
பாஜகவும் அதிமுகவும் வேகமாக நெருங்கிக் கொண்டு வருகின்றன என்ற தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவனின் குற்றச்சாட்டை தமிழக பாஜக பொதுச் செயலாளர் இல. கணேசன் மறுத்துள்ளார்.
முறைகேடுகள் அதிகமாக நடந்திருந்தும் ஆண்டிப்பட்டியில் மட்டும் தேர்தல் நடத்த மத்திய அரசுஅனுமதியளித்ததிலிருந்து, அதிமுகவும், பாஜகவும் நெருங்கி வருகிறது என காங்கிரஸ் தலைவர் இளங்கோவன்ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதுகுறித்து இல. கணேசன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசுடனான நல்லுறவை தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு விரும்புகிறது.
அதிமுகவுடனான கூட்டணியை எப்படியாவது தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று எவ்வளவோ முயன்றும்முடியாததால் இளங்கோவன் வேதனையடைந்துள்ளார்.
இதனால்தான் பாஜக பக்கம் அதிமுக சாய்கிறதே என்றும் இளங்கோவன் எண்ணி எண்ணி வேதனைஅடைந்துள்ளார்.
மேலும் காங்கிரஸ் தலைமையில் 3வது அணி அமைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சிகள்அனைத்தும் தோல்வியடைந்துவிட்டன. அதனாலேயே அவர் ஆண்டிப்பட்டி தேர்தலைப் புறக்கணிப்பதாகக்கூறியுள்ளார்.
இப்போது மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உள்ள உறவை பார்த்து, அதிமுகவும் பாஜகவும் கூட்டணிவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன என்று தாறுமாறாக கூறி வருகிறார் இளங்கோவன்.
ஆனால் தமிழகத்தில் பாஜவுக்கும் திமுகவுக்கும் இணக்கமான உறவுதான் நிலவி வருகிறது என்று கணேசன்கூறினார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!











Click it and Unblock the Notifications