சென்னை கிரிக்கெட்: பன்னீர் சகோதரர் மீது இளங்கோவன் குற்றச்சாட்டு
சென்னை:
தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரர் அத்துமீறியதால், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உரிய டிக்கெட்வைத்திருந்தும் போட்டியை காண முடியவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து இளங்கோவன் நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டியில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள்உரிய அனுமதி சீட்டு வைத்திருந்தும் உள்ளே சென்று விளையாட்டை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலர் எவ்வித அனுமதி சீட்டுமின்றி அத்துமீறி உள்ளே நுழைந்து, இருக்கைகளைப்பிடித்துக் கொண்டதே இதற்கு காரணம்.
குறிப்பாக முதல்வரின் சகோதரர் நூற்றுக்கும் மேற்பட்ட தன் நண்பர்களை போலீசார் அனுமதியின்றி உள்ளேநுழைந்து இருக்கைகளில் அமர்ந்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், காவல் துறையைச் சேர்ந்தவர்களின் உறவினர் பலர் முறையான அனுமதியின்றி உள்ளேஅனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டுப் போட்டிகளில்கூட முறைகேடு செய்யும் இந்த அரசை, அனுமதி சீட்டு இருந்தும் போட்டியை காணஇயலாத பொதுமக்களின் சார்பில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் முறையான அனுமதி சீட்டு பெற்று போட்டியை காண முடியாத பொதுமக்களுக்குமுழு கட்டணத்தையும் உடனடியாகத் திருப்பித் தர வேண்டும் என்று இளங்கோவன் கூறியுள்ளார்.
பன்னீர் மறுப்பு:
இதுபற்றி முதல்வர் பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
எனது சகோதரர்கள் யாரும் சென்னையில் கிரிக்கெட் போட்டியைக் காண செல்லவில்லை. போட்டி நடந்த நாளில்என்னுடைய சகோதரர்கள் யாரும் சென்னையிலேயே இல்லை.
என்னுடைய குடும்பத்தினர் 6 பேர் மட்டுமே கிரிக்கெட் போட்டியைப் பார்க்க சென்றனர். அவர்களும் முறையானஅனுமதி சீட்டு கொடுத்தே அந்த போட்டியை பார்த்தனர்.
இளங்கோவன் கூறுவது தவறான தகவல். அது போல் எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று பன்னீர்செல்வம்கூறினார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications