ஐ.எஸ்.ஐக்கு இ-மெயில் அனுப்பிய உளவாளி கைது
ஹைதராபாத்:
இந்தியப் பாதுகாப்பு தொடர்பான விவரங்களை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவுத் துறைக்கு இ-மெயில் மூலம்அனுப்பிய உளவாளியை நிஜாமாபாத் போலீசார் கைது செய்தனர்.
இதைக் கண்டுபிடித்த நிஜாமாபாத் போலீசார், அஷித் அலியை வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு மேற்கு வங்காளப் போலீசார் சில்குரி பகுதியில் முகமது தில்சாத் என்றமுக்கிய ஐ.எஸ்.ஐ. உளவாளியைக் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின்படி ரியாஸ் ஜன் என்பவனை ஹைதராபாத் போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவன் சில நாட்களுக்குமுன் போலீசார் பார்வையில் பட்டும் தப்பித்து விட்டான்.
இந்நிலையில் ரியாசை ஹைதராபாத் போலீசார் கைது செய்துவிட்டனர். அவன் இங்கிருந்து கொண்டு ஐ.எஸ்.ஐ.நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
அவனுடைய 2 உதவியாளர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications