பிப்ரவரி மாத இறுதியில் தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர்
சென்னை:
பிப்ரவரி மாத இறுதியில் தமிழகத்துக்கு கிருஷ்ணா நதி நீர் வந்து சேரும் என்று ஆந்திர மாநில அரசுதெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தின் கண்டலேறு நீர் தேக்கத்திலிருந்து கிருஷ்ணா நதி நீர் பூண்டி நீர்தேக்கத்துக்கு வருமாறுதிட்டங்கள் அமைக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக இந்த கிருஷ்ணா நதி நீர் தமிழகத்துக்கு வரவில்லை.
இது பற்றி கேட்டு அறிவதற்காக ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அதிகாரிகள் 10 நாட்களுக்குமுன் ஹைதராபாத் சென்றனர். ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் தமிழகம் திரும்பிய அந்தஅதிகாரிகள் கூறியதாவது:
கண்டலேறு நீர்த் தேக்கத்திலிருந்து பூண்டி நீர்த் தேக்கத்துக்கு வரும் வழியில் உள்ள பூண்டி கால்வாயில் விரிசல்ஏற்பட்டுள்ளது. அதனால் அதைச் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்தப் பணி பிப்ரவரி மாதம் 20ம் தேதிக்குள் முடிந்து விடும். அதற்கு பிறகு ஆந்திர அரசு தண்ணீரைத் திறந்துவிடும்.
தற்போது கண்டலேறு நீர்த்தேக்கத்தில் 15 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பிப்ரவரி மாதம் இறுதியில் 3டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த தண்ணீரால் சென்னைக்கு அக்டோபர் மாதம் வரை தண்ணீர் பஞ்சம் தீரும் என்று அந்த அதிகாரிகள்தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications