கடலூரில் ரூ.500 லஞ்சம் வாங்கிய துறைமுக அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

விசைப் படகுக்கு லைசென்சு வழங்குவதற்காக ரூ.500 லஞ்சம் வாங்கிய துறைமுக அதிகாரி கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவளையைச் சேர்ந்தவர் முகமது அலி (54), கடலூர் துறைமுகத்தில் நிர்வாகஅதிகாரியாக பணியாற்றுகிறார்.

இவரிடம் கடலூர் துறைமுகம் சாலக்கரை தெருவைச் சேர்ந்த ஜெயவேல் என்பவர், ஒரு விசைப் படகுக்கு லைசென்சுஎடுக்க கட்டணமாக ரூ.100ம் லஞ்சமாக ரூ.500ம் கொடுத்துள்ளார்.

ஆனால் லைசென்சு கொடுக்கப்படவில்லை. ஜெயவேல் லைசென்சு கேட்டபோது கட்டணமில்லாமல் படகை ஓட்டிச்செல்லச் சொன்னார். ஆனால் அவர் படகை கடலுக்குள் கொண்டு சென்றபோது வேறு படகுடன் மோதி சேதம்அடைந்து விட்டது.

அதனால் அவர் வேறு ஒரு படகை கடலுக்குள் கொண்டு சென்றார். அந்த படகை முகமது அலி பிடித்துக் கொண்டு,ரூ.500 லஞ்சமும் கேட்டுள்ளார். இதுபற்றி ஜெயவேல் கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் செய்தார்.

இதன்படி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயவேலிடம் ரூ.500 கொடுத்து அந்த அதிகாரியிடம் கொடுக்க சொல்லிவிட்டு,அவர்கள் துறைமுகம் அலுவலகம் அருகே மறைந்து நின்றனர்.

ஜெயவேலும் முகமுது அலியை பார்த்து ரூ.500 பணத்தை கொடுத்தார். உடனே மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புபோலீசார், முகமது அலியை கையும் களவுமாகப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட முகமது அலியை போலீசார் கடலூர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சின்னபாண்டி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி முகமதி அலியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+