ஆண்டிப்பட்டி வாக்காளர் பட்டியல்: தேர்தல் கமிஷனுக்கு டெல்லி கோர்ட் நோட்டீஸ்
டெல்லி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகபதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி திமுக வேட்பாளரான வைகை சேகர்தொடர்ந்துள்ள வழக்கை எதிர்த்து அத்தொகுதியின் அதிமுக வேட்பாளரான ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவைடெல்லி உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போது 17,000 போலி வாக்காளர்கள்சேர்க்கப்பட்டுள்ளதால் அங்கு இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி வைகை சேகர் கடந்த வாரம்டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை எதிர்த்து நேற்று ஜெயலலிதா சார்பில் அதே டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது. அரசியல் சட்டம் 309வது பிரிவின்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தேர்தலைநிறுத்தும்படி வழக்கு தொடர முடியாது என்று அம்மனுவில் ஜெயலலிதா கூறியிருந்தார்.
இம்மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார் நீதிபதி மன்மோகன் சரீன்.
இதற்கிடையே வைகை சேகர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், தேர்தல் கமிஷனிடம் கடந்த வாரம் நீதிபதிமன்மோகன் விளக்கம் கேட்டிருந்தார்.
இதையடுத்து ஆண்டிப்பட்டியில் ஆய்வு நடத்திய தேர்தல் அதிகாரி கே.ஜே. ராவின் அறிக்கையை தேர்தல் கமிஷன்வழக்கறிஞரான மேஹாந்திரத்தா டெல்லி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் 5 அல்லது 6 வாக்காளர்களின் பெயர்களே வாக்காளர் பட்டியலில் தவறாக இடம்பெற்றிருந்ததாக அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் வைகை சேகரோ 17,000 போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளதாகத் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளதைஇன்று சுட்டிக் காட்டிய நீதிபதி மன்மோகன், இது தொடர்பாக பிப்ரவரி 6ம் தேதிக்குள் அப்பிடவிட் ஒன்றைத்தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications