பிப்.15ம் தேதி ஆண்டிப்பட்டியில் கருணாநிதி பிரச்சாரம்
சென்னை:
வரும் பிப்ரவரி 15ம் தேதி ஆண்டிப்பட்டி தொகுதியில் தான் பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக திமுக தலைவர்கருணாநிதி தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதி இடைத் தேர்தல் பிப்ரவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது.
திமுக சார்பாக இத்தொகுதியில் வைகை சேகர் என்ற பாலசுந்தரம் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கருணாநிதி முடிவு செய்துள்ளார். அதன்படி அவர் வரும் பிப்ரவரி 15ம்தேதி அல்லது 16ம் தேதி ஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடல்நலக் குறைவு காரணமாக இத்தொகுதியில் பிரச்சாரம் செய்யக் கூடாது என்றுதான் முதலில் கருணாநிதிநினைத்தார். ஆனால் தற்போது நிச்சயம் பிரச்சாரம் செய்யப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் தான் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் ஆண்டிப்பட்டி மக்கள் திமுகவை ஏமாற்ற மாட்டார்கள்என்றும் கருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications