இந்தியாவில் ஊடுருவிய 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு:
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய 5 பேரை இந்திய ராணுவத்தினர்சுட்டுக் கொன்றனர்.
இத்தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்ட இந்திய ராணுவத்தினர், இவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
உடனடியாக ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தியதில், 5 தீவிரவாதிகளுமே சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கிடையே உதாம்பூர் மாவட்டத்தில் ஒரு இளைஞரைக் கடத்திய சில தீவிரவாதிகள், அவருடைய காதுகளைஅறுத்து விட்டு அவரை கீழே போட்டுவிட்டுப் போய்விட்டனர்.
அந்த இளைஞர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாகஇருப்பதாகக் கூறப்படுகிறது.
2 ஹிஸ்புல் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை:
இந்நிலையில் கூப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையேநடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில், 2 ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட அந்தத் தீவிரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும்கைப்பற்றப்பட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications