அழகிரி பிறந்த நாளில் தேர்தல் நிதியளித்த திமுகவினர்
மதுரை:
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியின் பிறந்த நாளின்போது, ஆண்டிப்பட்டி தேர்தலுக்காக திமுகபிரமுகர்களும் தொண்டர்களும் தாராளமாக நிதியளித்தனர்.
தனது 51-வது பிறந்த நாளை மதுரையில் நேற்று (புதன்கிழமை) வெகு விமரிசையாகக் கொண்டாடினார் அழகிரி.
மதுரை பழங்காநத்தத்தில் உள்ள அழகிரியின் வீட்டில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை அழகிரி கொண்டாடினார்.நிகழ்ச்சியின்போது அழகிரியின் மனைவி காந்தி மற்றும் குழந்தைகள் உடனிருந்தனர்.
திமுக மேலிடத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி கலந்து கொண்டார். மற்றும் முன்னாள் அமைச்சர்கள்பொன்.முத்துராமலிங்கம், பெரியசாமி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அழகிரியை வாழ்த்தினர்.
பிறந்த நாளுக்கு வரும் தொண்டர்கள், பிரமுகர்கள் ஆண்டிப்பட்டி தேர்தல் நிதிக்கு அன்பளிப்பு வழங்குமாறுஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இதையடுத்து வீட்டில் வைக்கப்பட்டிருந்த தேர்தல் நிதி உண்டியலில் பலரும்தாராளமாக பணம் போட்டனர்.
அழகிரியின் பிறந்த நாளையொட்டி மதுரை நகரெங்கும் வரவேற்பு வளைவுகள், கட் அவுட்கள் மூலம்அசத்தியிருந்தனர் அழகிரியின் ஆதரவாளர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications