புலிகள் சென்னை வருவதில் தவறில்லை: நெடுமாறன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப் புலிகள் தென்னிந்திய நகரத்தில் தங்கி பேச்சு நடத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று தமிழர் தேசியஇயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு நெடுமாறன் பேசுகையில் கூறியதாவது:

விடுதலைப் புலிகள் அமைப்பை விட தீவிரமான இயக்கம் வடக்கு அயர்லாந்து விடுதலைப் போராட்ட இயக்கம்.மிக உயரிய பொறுப்பில் இருந்த மெளன்ட் பேட்டன் பிரபுவை அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலைசெய்தனர். இன்னும் பல செயல்களையும் அவர்கள் செய்துள்ளனர்.

ஆனால் இங்கிலாந்து அரசாங்கம் அதையெல்லாம் மறந்து விட்டு அவர்களுடன் பேச்சு நடத்தியது.

இதையே முன்னுதாரணமாகக் கொண்டு சென்னை அல்லது தென்னிந்திய நகரமொன்றில், விடுதலைப் புலிகள்தங்கி இலங்கை அரசுடன் பேச்சு நடத்த அனுமதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

விடுதலைப் புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆதரவு கொண்ட கட்சிகளுக்கே அந்நாட்டுநாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை மக்கள் அதிக அளவில் ஓட்டுப் போட்டுள்ளனர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

இந்த சூழ்நலையைப் பயன்படுத்தி நீண்ட காலமாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழர் பிரச்சினையைத் தீர்க்கமத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று நெடுமாறன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+