சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை-நாகர்கோவில் மார்க்கத்தில் இவ்வார இறுதியில் சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்குகிறது.
அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து கிளம்பும் இந்தச் சிறப்பு ரயில்,மறுநாள் பிற்பகல் 1.45 மணிக்கு நாகர்கோவிலைச் சென்றடையும்.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமை (பிப்.3) மாலை 6.45 மணிக்கு நாகர்கோவிலிலிருந்து கிளம்பும் அதே சிறப்பு ரயில்,மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்தச் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்குகிறது.
தென்னக ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications