அயோத்தி: பா.ஜ.க.-வி.எச்.பி. மோதல் வெடிக்கிறது
டெல்லி:
அயோத்தி விவகாரம் தொடர்பாக பா.ஜ.கவுக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அவர்களிடம் நிலத்தைத் தர மத்திய அமைச்சர்களான அத்வானியும் முரளி மனோகர் ஜோஷியும் பிரதமரைவலியுறுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், சட்ட அமைச்சர் அருண ஜேட்லி போன்றவர்கள் இதனால் பெரும் சட்டச்சிக்கல் ஏற்படும் என்று கூறிவிட்டனர். இதையடுத்து இது குறித்து ஆராயுமாறு சட்ட அமைச்சகத்துக்கு வாஜ்பாய்உத்தரவிட்டார்.
ஆனால், இதுகுறித்து விசாரித்து முடிவெடுக்க சட்ட அமைச்சகம் நீண்டகாலம் எடுத்துக்கொள்ளும் என்றுகூறப்படுகிறது. மேலும் நேற்று நிருபர்களிடம் பேசிய பா.ஜ.க. தலைவரும் வாஜ்பாயின் நெருங்கிய நண்பருமானஜனா. கிருஷ்ணமூர்த்தி, ராமர் கோவில் பிரச்சனையில் வி.எச்.பியின் கருத்தை பா.ஜ.க. ஏற்காது என்றார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த விஷயத்தில் தேசிய ஜனநாயகக் கட்சிகளின் நிலை தான் எங்களது நிலையும்.வி.எச்.பி. என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதை பா.ஜ.க. ஆதரிக்காது. இந்தப் பிரச்சனையை நீதிமன்றம்அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலை என்றார்.
இதையடுத்து வாஜ்பாய் மீது வி.எச்.பி. பாய ஆரம்பித்திருக்கிறது.
வழக்கமாகவே வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு வாஜ்பாயின் மதசார்பின்மையின் மீது வெறுப்பு உண்டு.ஆனால், மதசார்பற்ற கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க பா.ஜ.கவில் வாஜ்பாயைத் தான் பிரதமராக்க வேண்டும்என்ற கட்டாயத்தால் அவரை பிரதமராக்க இந்த அமைப்புகள் ஒப்புக் கொண்டன.இப்போது வாஜ்பாய்க்கு எதிராக வி.எச்.பி. பேச ஆரம்பித்துள்ளது.
வி.எச்.பி. தலைவர் விஷ்ணு ஹரி டால்மியா இன்று எஸ்.ஏ.பி. டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த ஓராண்டாக ஆட்சியில் இருந்தும் கூட ராமர் கோவில் பிரச்சனையைத் தீர்க்க வாஜ்பாய் எந்த நடவடிக்கையும்எடுக்கவில்லை. பெரும் நம்பிக்கையுடன் தான் அவரை (பிரதமரை) சந்தித்தோம். ஆனால், வெறும் கையுடன் தான்திரும்பி வந்தோம்.
இது குறித்து சட்ட அமைச்சர் விசாரிப்பார் என்று வாஜ்பாய் கூறினார். இதை அவர் முன்பே செய்திருக்கலாமே.இத்தனை நாள் ஏன் சும்மா இருந்தார் என்று தெரியவில்லை.
முஸ்லீம்களுடன் பேச்சுவார்த்தை எல்லாம் நடத்த முடியாது. அவர்கள் வி.எச்.பியின் கருத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். நீதிமன்றத்தில் 50 வருடமாக இந்த வழக்கு நடக்கிறது. இன்னும் 50 வருடம் கூட நடக்கும். நாங்கள்இனியும் காத்திருக்க முடியாது.
நாங்கள் கோவில் கட்டினால் மத்திய அரசு கவிழும் என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. என்றார்.
இந்தப் பேட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ளது.
வி.எச்.பிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை:
அதே நேரத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு பா.ஜ.கவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தை மீறி கோவில் கட்டும்பணியில் வி.எச்.பி. ஈடுபட்டால் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என பா.ஜ.க. பொதுச் செயலாளர் சுனில்சாஸ்திரி கூறினார்.
இவரும் அதே டிவிக்குத் தான் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வாஜ்பாய் மிகுந்த தீவிரம் காட்டி வருகிறார். இதைப்பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்க்க முடியும். அரசு நடுநிலையுடன் செயல்பட்டு பிரச்சனையைத் தீர்க்க பாடுபடும்என்றார்.
ராமர் கோவில் பிரச்சனையில் பா.ஜ.கவும் வி.எச்.பியும் நேரடியாக மோதிக் கொள்வது இதுவே முதல்முறையாகும்.












Click it and Unblock the Notifications