காணாமல் போன மாஜி எம்.எல்.ஏ.: நீதிமன்றத்தில் ரகசிய விசாரணை
சென்னை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவான எம்.கே. பாலன் காணாமல் போனது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளஅவருடைய மகன் சார்பிலும் போலீசார் சார்பிலும் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில் ரகசியவிசாரணை நடைபெற்றது.
கடந்த டிசம்பர் 30ம் தேதி அதிகாலை வாக்கிங் சென்ற பாலன், இதுவரை வீடு திரும்பவேயில்லை.
தற்போது திமுகவில் உள்ள பாலனை அதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் தமிழக போலீசார்தான்கடத்தியுள்ளனர் என்று கூறி அவருடைய மகன் மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் பாலனைத் தாங்கள் கடத்தவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கை எதிர்த்துஅதிமுக சார்பில் அக்கட்சி எம்.பியான திண்டுக்கல் சீனிவாசன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தொடர்பாக ரகசியமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.
அதன்படி இரு தரப்பினர் சார்பிலும் நீதிபதி வெங்கடாச்சல மூர்த்தி மற்றும் நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர்முன்னி இன்று ரகசிய விசாரணை நடைபெற்றது.
வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளைத் தவிர வேறு யாரும் விசாரணையின்போதுஅனுமதிக்கப்படவில்லை.
பின்னர் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
வெளியே சொல்ல முடியாத சில தகவல்களை நீதிபதிகளிடம் மட்டும் தெரிவிக்க வேண்டிய கட்டாயம்ஏற்பட்டதால்தான் இந்த ரகசிய விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மனுதாரரின் வழக்கறிஞர் பின்னர்தெரிவித்தார்.
தன்னுடைய தந்தையை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக ஆளுநர் ராமமோகன் ராவிடமும் மணிமாறன் புகார்மனு ஒன்றைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications