ஆண்டிப்பட்டி: ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் 2 மின்னணு எந்திரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டியில் 24 பேர் போட்டியிடுவதால் ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும் 2 மின்னணி வாக்குப் பதிவுஎந்திரங்களை வைக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

ஒரு வாக்குப் பதிவு எந்திரத்தில் 16 பேரின் பெயர்களும் சின்னங்களும் தான் இடம் பெற முடியும். ஆனால்,ஆண்டிப்பட்டியில் 24 பேர் களத்தில் உள்ளனர். இதனால், இவர்களின் பெயர்களை இடம் பெறச் செய்ய இருவாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளன.

வரும் 21ம் தேதி தேர்தல் நடக்கவுள்ள ஆண்டிப்பட்டியில் மொத்தம் 126 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

முதலில் இத் தொகுதியில் ஜெயலலிதா உள்பட 33 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். இதில் 3 சுயேச்சைகளின்மனுக்கள் சரியான ஆவணங்கள் இல்லாததால் நிராகரிக்கப்பட்டன.

அதிமுக, புதிய தமிழகம் கட்சிகளின் டம்மி வேட்பாளர்களும், மேலும் 4 பேரும் வேட்பு மனுக்களை வாபஸ்வாங்கினர். இதனால், 24 பேர் களத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+