2 மான்களைக் கொன்ற தேடப்படும் சிங்கம்
சென்னை:
வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்களால் தேடப்படும் சிங்கம் (?) நேற்று (வியாழக்கிழமை) அங்கு 2மான்களைக் கொன்றது.
கடந்த 10 நாட்களாகத் தேடப்பட்டு வரும் சிங்கம் தொடர்ந்து பிடி கொடுக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறது.
அது உண்மையிலேயே சிங்கம்தானா அல்லது சிறுத்தையா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
அந்த விலங்கைத் தேடி 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்களும் போலீசாரும் துப்பாக்கியுடன் அலைந்துகொண்டுள்ளனர்.
மேலும் அந்த விலங்கைப் பிடிப்பதற்காக மிருகக்காட்சி சாலைக்குள் 15 இடங்களில் இரும்புப் பொறிகள்வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் உயரமான பரண்களை அமைத்தும் துப்பாக்கியுடன் ஊழியர்கள்தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
இவ்வளவு பாதுகாப்புகளையும் மீறி அந்த மிருகம் நேற்று மிருகக்காட்சி சாலையில் உள்ள 2 மான்களைத் தாக்கிக்கொன்றுள்ளது.
சுமார் 3 ஏக்கர் பரப்பில் உள்ள திறந்த வெளியில் சுமார் 50 மணிப்புரி மான்கள் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும்.
நேற்று காலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள் இப்பகுதிக்குள் புகுந்த அந்த விலங்கு ஒரு தாய் மானையும்அதனுடைய குட்டியையும் தாக்கிக் கொன்றது.
பின்னர் 2 மான்களையும் தூக்க முடியாததால் தாய் மானைக் கீழே போட்டுவிட்டு, குட்டியை மட்டும் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டது.
மான்களின் அலறல் கேட்டு ஊழியர்கள் துப்பாக்கிகளுடன் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் அந்த விலங்குதப்பியோடி விட்டது.
இதையடுத்து அப்பகுதியைச் சுற்றிலும் அந்த விலங்கு வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications