டெண்டுல்கருக்கு ஆயுதமேந்திய போலீசார் காவல்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி மற்றும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின்டெண்டுல்கர் ஆகியோரை தீவிரவாதிகள் கடத்தப் போவதாக வந்த மிரட்டல்களையடுத்து, 2 பேருக்கும்ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புக்காகப் போடப்பட்டுள்ளனர்.
பிரதமரின் முன்னாள் அறிவியல் ஆலோசகர் அப்துல் கலாமை பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. ஆதரவுதீவிரவாதிகள் கொலை செய்ய முயற்சித்ததாகவும், டெண்டுல்கர் மற்றும் கங்குலியை அவர்கள் கடத்தத்திட்டமிட்டுள்ளதாகவும் இந்திய உளவுத் துறைக்குத் தகவல் வந்தது.
இதையடுத் இவர்களுக்குப் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள கங்குலியின் வீட்டிலும்மும்பையில் உள்ள டெண்டுல்கரின் வீட்டிலும் ஆயுதமேந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 6வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டிவரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.3) மும்பையில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் விளையாடவுள்ள டெண்டுல்கருக்கும் கங்குலிக்கும் ஆயுதமேந்திய சிறப்பு போலீசார்பாதுகாப்புக்காகப் போடப்பட்டுள்ளனர்.
மேலும் போட்டி நடைபெறவுள்ள மைதானம் முழுவதையும் மும்பை மாநகரப் போலீசார் தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.
இம்மைதானம் முழுவதிலும் இப்போதிலிருந்தே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் ஏராளமானபோலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மும்பை கடத்தல் மன்னனான சோட்டா ஷக்கீல் சினிமா தயாரிப்பாளரான விது வினோத் சோப்ராஎன்பவரிடம் ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து சோப்ரா இதுவரை வாயே திறக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications