திருப்பதியில் தெருவில் துப்பினால் இனி அபராதம்
திருப்பதி:
திருப்பதியில் சுற்றுச்சூழல் மிக வேகமாக சீர்கெட்டு வருவதையடுத்து அதைத் தடுக்க தீவிர முயற்சிகளில்இறங்கியுள்ளது திருமலை தேவஸ்தானம்.
முதல் கட்டமாக திருப்பதி மலையில் பிளாஸ்டிக் கப்களை பயன்படுத்திவிட்டு எறிபவர்கள், கண்ட இடத்தில் மல,ஜலம் கழிப்பவர்கள், குப்பையை ரோட்டில் போடுபவர்கள் புகை பிடிப்பவர்கள் ஆகியோருக்கு ஆன்-த-ஸ்பாட்அபராதம் விதிக்கப்படவுள்ளது.
இன்று முதல் இத் திட்டம் அமலுக்கு வருகிறது.
திருமலையில் உள்ள டீக்கடைகளில் சுகாதாரம் கருதி பிளாஸ்டிக் கப்களில் தான் டீ தரப்படுகிறது. ஆனால், இந்தபிளாஸ்டிக் கப்கள் மண்ணில் கரைவதும் இல்லை. இதனால், திருமலையில் இந்த கப்களால் பெரும் சுற்றுச் சூழல்கேடு ஏற்பட்டுள்ளது. இனி பேப்பர் பிளேட்கள், தெர்மோபிளாஸ்க் கப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்எனவும் தேவஸ்தானம் டீக் கடைகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தவிர பான்பராக், வெற்றிலை போன்றவற்றை மென்றுவிட்டுத் துப்புவதால் எத்தனை முறை சுத்தப்படுத்திவெள்ளையடித்தாலும் சாலைகளும் சுவர்களும் அலங்கோலமாகிவிடுகின்றன. இதனால் இந்த அபராதநடவடிக்கையில் தேவஸ்தானம் இறங்கியுள்ளது.
கோவிலையும், அழகிய இந்த மலைப் பகுதியின் சூழலையும் சுத்தமாகப் பராமரிக்க பக்தர்களும் பொது மக்களும்முழு ஒத்துழைப்புத் தர வேண்டும் எனவும் தேவஸ்தானம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications