மலை கிராமங்களில் டெலிபோன்கள் கட்: அதிரடிப் படை நடவடிக்கை
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை அதிரடிப்படையினர் விரைவில் பிடிப்பார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
வீரப்பன் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் மாதேஸ்வரன் மலைப் பகுதியை கர்நாடக மற்றும் தமிழகஅதிரடிப்படை வீரர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இம்முறை வீரப்பன் தப்பி விடக் கூடாது என்பதில் அவர்கள் மிககவனத்துடன் இருக்கின்றனர்.
இருப்பினும் தேடுதல் வேட்டை தொடர்பாக பத்திரிக்கையாளர்களுக்கு செய்திகள் தருவதை அதிரடிப்படைமுழுமையாக நிறுத்திக் கொண்டுவிட்டது.
மேலும், வீரப்பன் தொடர்பான செய்திகள் வெளியில் பரவுவதைத் தடுக்கும் வகையில், மதேஸ்வரன் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் தொலைபேசி இணைப்புகளையும் துண்டித்துள்ளனர். எனவே இங்கிருந்து யாரும்தொலைபேசியில் வெளியுலகைத் தொடர்பு கொள்ள முடியாது.
இருப்பினும், வீரப்பன் தரப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் சரண் அடைவது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பத்திரிக்கை அலுவலகங்களை போனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியானது. அது உண்மையாஇல்லையா என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், அதுமாதிரியான சம்பவங்கள் மீண்டும் நடந்து விடாமல்தடுக்கவே தொலைபேசி இணைப்புகளை அதிரடிப்படை துண்டித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கர்நாடக அதிரடிப்படை தலைவர் கெம்பையா, துணைத் தலைவர் பிரசாத் ஆகியோர் மாதேஸ்வரன்மலை முகாமில் இரவு பகலாக முகாமிட்டுள்ளனர்.
மாதேஸ்வரன் மலைப் பகுதியில் இருந்து வேறிடத்துக்குத் தப்பும் முயற்சிகளில் வீரப்பன் ஈடுபட்டுள்ளான்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications