ஆண்டிப்பட்டியைக் கலக்கும் அழகிரி-தினகரன்
தேனி:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக சார்பில் தினகரனும், திமுக சார்பில்அழகிரியும் பிரச்சார பீரங்கிககளாக செயல்பட்டு தங்கள் முத்திரையை பதித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டியில் வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில்ஜெயலலிதாவும், திமுக சார்பில் வைகை சேகரும், மதிமுக சார்பில் ஜெயச்சந்திரனும், புதிய தமிழகம் சார்பில்டாக்டர் கிருஷ்ணசாமியும் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.
ஜெயலலிதா போட்டியிடுவதால் நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்ட ஆண்டிப்பட்டி நட்சத்திர அந்தஸ்து பெற்றுவிட்டது. இந்தத் தொகுதியில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தான் நேரடி போட்டி.
அதிமுகவின் முக்கிய பிரச்சார பீரங்கியாக தினகரனும், திமுகவின் பிரச்சார பீரங்கியாக மு.க. அழகிரியும்செயல்பட்டு ஆண்டிப்பட்டியை கலக்கி வருகின்றனர்.
அதிமுக பிரச்சார பீரங்கி தினகரன்:
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பிரச்சாரத்தில் குதித்துள்ளார் தினகரன். இந்த ஒரு மாத காலமாக இவரதுகாரும், காலும் படாத ஊரே இல்லை. ஆரம்பத்தில் ஊர், ஊராக செல்வது, பெரிய மனிதர்கள், ஜாதித் தலைவர்கள்ஆகியோரைச் சந்திப்பது என்று பல்வேறு வியூகங்களை வகுத்து ஆதரவு திரட்டினார்.
கிராமங்களில் கட்டப்பட்டு வரும் கோவில்களுக்கும் தாராளமாக பண உதவி செய்தார். தற்போது மாற்றுகட்சியினரையும், உள்ளூர் பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
பின்னர் மாலையில் தனது பிரச்சாரத்தை துவக்குகிறார். இரவு 11 மணி வரை கிராம மக்களிடம் பேசுகிறார். எந்தபந்தாவும் இல்லாமல் தன்னுடன் யாரையும் அழைத்துச் செல்லாமல் உள்ளூர் கட்சிப் பிரதிநிதிகளை மட்டும்தன்னுடன் அழைத்துச் செல்கிறார்.
தான் விரும்பும் இடங்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் செல்கிறார். தான் வருவதற்கு ஒரு மணி நேரம்முன்பாகத் தான் அவர் போக வேண்டிய இடத்தில் எம்.ஜி.ஆர். படங்கள் ஒலி, ஒளி பரப்பப் படுகின்றன.
தினகரனின் இந்த எளிமையான பிரச்சாரம் ஆண்டிப்பட்டி மக்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அழகிரியின் கையில் திமுக பிரச்சார வியூகம்:
திமுக தலைவர் கருணாநிதியின் மகன் என்ற முறையில் இவருடன் பத்துக்கும் அதிகமான வாகனங்கள் தொடர்ந்துவருகின்றன. ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலைப் பொறுத்தவரை அனைத்து வியூகங்களும் அழகிரியின்கட்டுப்பாட்டில் தான் உள்ளது.
அழகிரி செல்லும் இடங்களுக்கு முன்பே தகவல் தரப்பட்டு அதிக அளவில் கூட்டம் கூட்டப்படுகிறது. தனக்குத்தெரிந்த சில விஷயங்களை மட்டும் ஒரு சில நிமிடங்களில் சொல்லி விட்டு திமுகவுக்கு வாக்களிக்குமாறுகேட்கிறார்.
அதிமுக அரசைப் பற்றிய குறைபாடுகளை எடுத்துச் சொல்வதில்லை என்ற ஆதங்கம் திமுகவினரிடையேநிலவுகிறது. இவரும் எந்த பந்தாவும் இல்லாமல், மழை பெய்தால் வேட்டியை மடித்துக் கொண்டு சாதாரணகுடிமகன் போல் நடந்து கொள்வது பொது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆண்டிப்பட்டியில் போட்டியிடும் வேட்பாளராக ஜெயலலிதாவும், வைகை சேகரும் அறிவிக்கப்பட்டிருந்தாலும்,இது உண்மையில் தினகரனுக்கும், அழகிரிக்கும் இடையில் நடக்கும் பலப்பரீட்சையாகத்தான் கணிக்கப்படுகிறது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications