"க்ரைம் பீட்" வேட்டை: ஒரே நாளில் 3,806 ரவுடிகள் கைது
சென்னை:
போலீசார் பிடியில் இருந்து தப்பி வந்த குற்றவாளிகளைப் பிடிக்க "க்ரைம் பீட்" என்ற அதிரடி வேட்டையில், 3,806பேர் கைது செய்யப்பட்டனர்.
குற்றங்கள் புரிந்து விட்டு போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து, நடமாடிக் கெண்டிருப்போரைப் பிடிக்கவும்,நிலுவையில் உள்ள வாரன்ட்களை நிறைவேற்றவும் அதிரடி வேட்டை நடத்த தமிழக போலீசார் முடிவு செய்தனர்.
இதன்படி டி.ஜி.பி. நெய்வால் உத்தரவுப்படி கூடுதல் டி.ஜி.பி. ரமணி தலைமையில் தமிழகப் போலீசார்ஒருங்கிணைந்து இந்த வேட்டையை நடத்தினர்.
இரவோடு இரவாக ஒரே நாளில் நடத்தி முடிக்கப்பட்ட இத்திட்டத்துக்கு "க்ரைம் பீட்" என்று பெயரிடப்பட்டது.அதிரடி வேட்டைக்காக பல்வேறு இடங்களில், மொத்தம் 3,700 ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
நிலுவையில் இருந்த 908 வாரன்ட்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து ஒரே நாளில் 3,806 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டனர். குற்றவாளிகள் வந்த 136 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சொத்துக்கள் சம்பந்தமாக 30 குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தலைமறைவாகிய 31 குற்றவாளிகளும்பிடிபட்டனர்.
தமிழக போலீசாரின் இந்த "க்ரைம் பீட்" வேட்டையை சிறந்த சாதனை என்று நெய்வால் கூறினார்.


Click it and Unblock the Notifications
