ப்ளஸன்ட் ஸ்டே வழக்கு: உச்ச நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கொடைக்கானல் ப்ளஸன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ப்ளஸ்ன்ட் ஸ்டே வழக்கு மற்றும் டான்சி வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் 4ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்டோரைவிடுவித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏற்கனவே டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து திமுக வழக்கறிஞரான ஆர்.எஸ்.பாரதி மற்றும்ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களைத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் ப்ளஸன்ட் ஸ்டே வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைஎதிர்த்து பாரதி மேலும் ஒரு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எம்.பி.ஷா மற்றும் பி.என். அகர்வால் முன்னிலையில் நேற்று (திங்கள்கிழமை) இந்தமனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்தனர். மேலும் இந்த வழக்கு குறித்து தமிழகஅரசின் சார்பில் ஏதாவது மனு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றப்பதிவாளர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+