ஆண்டிப்பட்டி தேர்தல்: திமுக பிரச்சாரத்தால் பன்னீர் வேதனை
சென்னை:
நான் முதல்வராக நீடிக்க வேண்டும் என்றால், ஜெயலலிதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற கெட்டஎண்ணத்துடன் திமுகவினர் பிரச்சாரம் செய்கின்றனர் என்று வேதனையுடன் கூறினார் தமிழக முதல்வர்பன்னீர்செல்வம்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் ஜெயலலிதாவை தோற்கடிக்க திமுகவினர் புதிய வகையானபிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.
மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சமீபத்தில் தன்னுடைய பிரச்சாரத்தின்போது, சென்னையைச் சேர்ந்த ஜெயலலிதாமுதல்வராக வேண்டுமா? அல்லது உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டுமா?பன்னீர் முதல்வராக நீடிக்க வேண்டுமென்றால் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்காதீர் என்று கூறினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் பன்னீர் கூறியதாவது:
குறுகிய வட்டத்தில் அரசியல் கண்ணோட்டத்தோடு திமுகவினர் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஜாதிமதத்துக்கு அப்பாற்பட்டு மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார்.
அவரது தலைமையின் கீழ் நான் ஒரு தொண்டனாகவே பணியாற்றுகிறேன். திமுகவினர் தான் கெட்டஎண்ணத்துடன் இது போன்று பிரச்சாரம் செய்கின்றனர். இதை மக்களும் நன்கு அறிவர்.
இந்த தேர்தலில் எதைச் சரியாக செய்ய வேண்டுமென மக்கள் தீர்மானித்து விட்டனர். அதன்படி ஜெயலலிதாவெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பு ஏற்பார்.
கடந்த சட்டசபை தேர்தலின்போது, யார் முதல்வராக வர வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள்விடுத்தோமோ, அவரே இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஜெயலலிதா முதல்வராக மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் வாக்களிக்கும்படி வலியுறுத்தி பிரச்சாரம்செய்வோம் என்று பன்னீர் கூறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications