தமிழகத்தில் மேலும் 50 மகளிர் காவல் நிலையங்கள்
ஊட்டி:
தமிழகத்தில் இந்த ஆண்டுக்குள் புதிதாக 50 மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மாநில உள்துறைசெயலாளர் நரேஷ் குப்தா கூறினார்.
ஊட்டி வந்திருந்த நரேஷ் குப்தா அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கனவே 58 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன.
அதனால் மேலும் 50 புதிய மகளிர் காவல் நிலையங்களைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. படிப்படியாக இந்தஆண்டுக்குள் இந்த 50 காவல் நிலையங்களும் திறக்கப்பட்டு விடும்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் 52,000 ஏக்கர் வன நிலம் தனியார்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இது 1964ம்ஆண்டு ஆய்வு செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போது இதன் எண்ணிக்கை கூடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து புதிதாக ஆய்வு நடத்தப்படும்.அதன் பின்னர் அந்த ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நரேஷ் குப்தா கூறினார்.












Click it and Unblock the Notifications