கடத்தல்காரர்களுடன் நிருபர் மனைவி பேச விருப்பம்
கராச்சி:
தன் கணவர் டேனியல் பேர்லைக் கடத்தியவர்களுடன் பேச்சு நடத்த மரியான் பேர்ல் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆனால் கடந்த 4 நாட்களாக அந்தத் தீவிரவாதிகளிடமிருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை. இதையடுத்துடேனியல் உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு மரியான் பேட்டியளித்தபோது, தன் கணவரைக்கடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கான முயற்சிகளையும் எடுத்துள்ளதாக மரியான் கூறினார். யாரோ செய்த கொலைகளுக்கு அப்பாவிகளைப்பழிவாங்குவது தவறு என்று அவர்களிடம் கூறப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கராச்சியில் இந்தப் பேட்டியை அளித்த 6 மாத கர்ப்பிணியான மரியானும் ஒரு பகுதி நேர பத்திரிக்கை நிருபர்தான்.
அவருடைய கடிதம் பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
பி.பி.சி. தொலைக்காட்சிக்கு மரியான் அளித்த பேட்டியிலும் கடத்தல்காரர்களுடன் தான் பேச விரும்புவதாகத்தெரிவித்தார்.
"என் கணவருக்காக நான் என் உயிரைக் கொடுக்கத் தயாராக உள்ளேன். என் உயிரை எடுத்துக் கொண்டு அவரைவிட்டுவிடுங்கள். அல்லது அவர் அருகிலேயே இருந்து என்னைச் சாகவிடுங்கள்" என்று அப்பேட்டியின்போதுஉருக்கத்துடன் மரியான் கூறினார்.
டேனியல் எங்கே?
இதற்கிடையே டேனியலைத் தேடித் தேடி பாகிஸ்தான் போலீசார் சலிப்படைந்து போயுள்ளதாகத் தெரிகிறது.
இருந்தாலும் அவர்கள் தங்கள் முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டுள்ளனர். இதையடுத்து டேனியல் எங்குஉள்ளார் என்பது குறித்த மர்மம் நீடித்து வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சடலம் தன் கணவருடையது அல்ல என்றுமரியான் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில் டேனியல் உயிரோடுதான் உள்ளார் என்று இ-மெயில் மூலம் தகவல் அனுப்பிய 16 வயது இளைஞர்ஒருவரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications