ஆண்டிப்பட்டி: தேர்தல் கமிஷனிடம் புகார் செய்ய வைகோ முடிவு
மதுரை:
ஆண்டிப்பட்டியில் நடக்கும் தேர்தல் முறைகேடுகள் குறித்து தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கவுள்ளதாகமதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதுரைக்குச் சென்றுள்ள வைகோ திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக பல்வேறு தேர்தல் முறைகேடுகளை செய்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய தேர்தல் கமிஷனிடம் புகார்கொடுக்கவுள்ளோம்.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதில் தவறேதும் இல்லை. மெளன்ட் பேட்டன்பிரபுவைப் படுகொலை செய்த அமைப்பான வட அயர்லாந்து விடுதலைப் போராட்ட அமைப்பைச் சேர்ந்தஹியூமுக்கு காந்தி அமைதி விருது கொடுக்கும்போது விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் மன்னிப்பு வழங்குவதில்தவறில்லை.
அயோத்தி பிரச்சினை காரணமாக மத்தியில் உள்ள ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.ஆட்சி நடத்துவதற்கான பொதுத் திட்டத்தில் அயோத்திப் பிரச்சினை இடம் பெறவில்லை என்று வைகோ கூறினார்.
அரசு ஊழியர் போராட்டத்திற்கு ஆதரவு:
இதற்கிடையே தமிழக அரசு ஊழியர்கள் 7ம் தேதி முதல் மேற்கொள்ளவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்குமதிமுக ஆதரவளிக்கும் என்று வைகோ கூறியுள்ளார்.
அரசு ஊழியர் பிரச்சினையை உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண அரசு முயற்சிக்க வேண்டும்என்றும் 12 லட்சம் அரசு ஊழியர்களின் பாதிப்புகளைக் கண்டும் காணாமல் இருக்கிறது அதிமுக அரசு என்றும்வைகோ கூறினார்.
அரசு கஜானா காலியாகி விட்டது என்று கூறும் அதிமுக அரசில் உயர் பதவிகளில் உள்ளவர்கள் செய்யும்செலவுகள் மிகவும் ஆடம்பரமாகவே உள்ளன. இன்னும் கூட அவர்கள் சொகுசான வாழ்க்கையே வாழ்கின்றனர்என்றும் கூறியுள்ளார் வைகோ.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications