சிங்க வேட்டை: மத்திய வனத்துறை அதிகாரிகள் வண்டலூர் வருகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் தேடப்பட்டு வரும் சிங்கம் குறித்து விசாரணை நடத்துவதற்காகமத்திய வனத்துறை அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) இங்கு வந்து சேர்ந்துள்ளனர்.

சென்னை வண்டலூர் மிருகக்காட்சி சாலைக்கு அருகில் உள்ள கேளம்பாக்கம் சாலையில் மோட்டார் சைக்கிளில்சென்ற 2 பேர் சாலையில் சிங்கத்தைப் பார்த்ததாக மிருகக்காட்சி சாலை இயக்குனரிடம் தெரிவித்தனர்.

ஆனால் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்களின் எண்ணிக்கை சரியாக இருந்தது. அதனால் அந்தமிருகத்தைத் தேடும் பணியில் மிருகக்காட்சி ஊழியர்கள் போலீசார், வனத்துறையினர் 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.இதனால் மிருகக்காட்சி சாலை காலவரையறை இன்றி மூடப்பட்டது.

கடந்த வாரம் இந்த சிங்கம் 2 மான்களை அடித்துக் கொன்று விட்டது. இந்நிலையில் நேற்று அதிகாலை சிங்கம்மீண்டும் மான்கள் உள்ள பகுதிக்குள் புகுந்து 2 மான்களைக் கடித்துக் கொன்றுள்ளது.

இதையடுத்து சிங்கத்தைத் தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தேடப்பட்டு வரும் சிங்கம் குறித்து விசாரணை நடத்துவதற்காக மத்திய வனத்துறை அதிகாரிகள்இன்று வண்டலூர் வந்து சேர்ந்தனர்.

இவர்கள் இதுகுறித்த அறிக்கை ஒன்றை அளித்த பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றுமத்திய வனத்துறை அமைச்சர் டி.ஆர். பாலு நிருபர்களிடம் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+