சென்னை குண்டுவெடிப்பு: 3 திமுகவினருக்கு 7 ஆண்டு கடுங்காவல்
சென்னை:
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது 1986ம் ஆண்டு சென்னையில் நடந்த 4 குண்டுவெடிப்புச் சம்பவங்கள்தொடர்பாக திமுக தொண்டர் அணி செயலாளர் கென்னடி உள்ளிட்ட 4 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதித்து பூந்தமல்லி சிறப்பு செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
1986ம் ஆண்டு திமுக சார்பில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலும் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏக்கள் அரசியல் சட்ட நகலை எரித்தனர். இதையடுத்துஅவர்களது எம்.எல்.ஏ. பதவிகள் பறிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் அரசியல் சாசன நகலை எரிக்கும் போராட்டத்தை கருணாநிதி நடத்தினார்.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
கருணாநிதி கைது செய்யப்பட்டதும் தமிழகத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக நடந்த போராட்டத்தில்மேலும் 3 எம்.எல்.ஏக்களின் பதவிகள் பறிக்கப்பட்டன.
மேலும் கருணாநிதி கைதைக் கண்டித்து சென்னையில் நடந்த போராட்டத்திற்கிடையே 4 இடங்களில் குண்டுகள்வெடித்தன. ஏர் இந்தியா அலுவலகம், இந்தி பிரசார சபை உள்ளிட்ட இடங்களில் இந்த குண்டுகள் வெடித்தன.
இதுதொடர்பாக அப்போதைய எம்.ஜி.ஆர். அரசு திமுகவினர் 6 பேரைக் கைது செய்து வழக்குப் போட்டது.அவர்களில் நீல நாராயணன் என்பவர் இறந்து விட்டார்.
மற்ற 5 பேர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. அவர்களில் 2 பேர் பின்னர் காணாமல் போய் விட்டனர். மற்ற 3 பேர்மீதும் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. திமுக தொண்டர் அணி செயலாளர்கென்னடி, மதி மற்றும் தினகரன் ஆகியோருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ. 20,000 அபராதம் விதிக்கப்பட்டது. இறந்த நீல நிாராயணனுக்கும் இதே தண்டனை அளிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் அபராதம் கட்டிய பின் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திமுகவட்டாரத்தில் இந்த தீர்ப்பு சற்றே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்











Click it and Unblock the Notifications