இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட ரெடி: முஷாரப்
இஸ்லாமாபாத்:
இந்தியாவுடன் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டியில் விளையாடபாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறினார்.
பாகிஸ்தான் விளையாட்டு வீரர்கள் இந்தியாவுடன் விளையாட (முக்கியமாக கிரிக்கெட்) தயாராகவும்ஆர்வத்துடனும் உள்ளனர் என்று முஷாரப் தெரிவித்தார்.
விளையாட்டுப் போட்டியில் அரசியலைக் கலக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்ட முஷாரப், இந்தியாவுடன்விளையாட்டுப் போட்டிகளுக்கு மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் என்றுகூறினார்.
கடந்த 1999ல் கார்கில் போர் ஏற்பட்ட பிறகு பாகிஸ்தானுடன் இந்தியா எந்தவித கிரிக்கெட் போட்டியிலும் கலந்துகொள்ளாது என்று அறிவித்தது. இதையடுத்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக டொராண்டோவில் நடைபெற்ற சகாராகோப்பை மற்றும் ஷார்ஜா கிரிக்கெட் போட்டிகளை இந்தியா தவிர்த்து விட்டது.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ளும்வரை அதனுடன் பேச்சுவார்த்தை என்றபேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா கூறி வருகிறது.
இந்நிலையில் இந்தியாவுடன் விளையாடத் தயார் என்று கூறிய முஷாரப், சந்தடி சாக்கில் பேச்சுவார்த்தைக்கும்தயார் என்று கூறியுள்ளது வேடிக்கையாகத்தான் உள்ளது.












Click it and Unblock the Notifications