புதிய வீராணம் திட்டத்தை கைவிட ராமதாஸ் கோரிக்கை
சென்னை:
புதிய வீராணாம் திட்டத்தை நிறுத்தி விட்டு, கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வருவதற்கானநடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இதுகுறித்து ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக அறிமுகப்படுத்திய திட்டம் என்பதற்காகவே அதிமுக அரசு கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை விட்டு புதியவீராணம் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
வீராணம் திட்டமும் 30 ஆண்டுகளுக்கு முன்பு திமுக வகுத்த திட்டம்தான். இப்போது ரூ.820 கோடிக்கு அந்ததிட்டத்தையே பெயர் மாற்றி புதிய வீராணம் என்று அதிமுக அரசு மாற்றியுள்ளது.
இந்தத் திட்டம் வீராணம் ஏரியிலிருந்து 1 டி.எம்.சி. தண்ணீர் பெறவே உதவும். மேலும் இந்த வீராணம் ஏரி,சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ளது.
கிருஷ்ணா நீர் திட்டமோ ஆண்டுக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் பெற உதவும். ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம்ஆண்டுக்கு 5 டி.எம்.சி. தண்ணீரே நாம் பெறுகிறோம். ஏன் இது குறித்து தமிழக அரசு இது வரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை?
இது குறித்து தமிழக அரசு, ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 15 டி.எம்.சி. தண்ணீரையும் பெற முயற்சிக்கவேண்டும்.
மேலும் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்திலிருந்து ரூ.900 கோடி மூலம் தண்ணீர் பெறவும் அரசு முயற்சிக்கவேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications