திமுகவினருக்கு கருணாநிதி சவுக்கடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதியில் திமுக வெற்றி பெறுவதற்கு உங்களால் ஆனதை செய்ய வேண்டும் என்றுதிமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள காட்டமான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுகவினர் முன்னால் நாம் திருவோடு ஏந்தி தான் காட்சியளிக்கிறோம் என்பது கற்பனை அல்ல. முற்றிலும்உண்மை. இந்த உண்மையை உணர்ந்தும் கூட ஏதோ நம்மால் ஆன சிறு நிதி உதவியோ, உழைப்பையோ கொடுத்து திமுகவேட்பாளர் வைகை சேகர் வெற்றி பெற துணை நிற்போம் என்ற முனைப்பு திமுகவினருக்கு இல்லை.

இந்த முனைப்பு ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களாக, பாராளுமன்றஉறுப்பினர்களாக, அமைச்சர்களா இருந்தவர்கள் தாங்கள் இந்த பொறுப்பில் அமர்ந்திட எத்தனை தோழர்கள் ரத்தம்சிந்தினர் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

தலைமை எப்படி அலையாய் அலைந்து, திருவோடு ஏந்தாத குறையாக நிதிப் பிச்சை எடுத்துப் பொருள் சேர்த்து,தமக்காக தவங்கிடந்து கொடுத்தது என்ற கடந்த காலத்தை மறந்து விட்டுப் பலர் இருந்த இடத்திலிருந்தே,ஆண்டிப்பட்டி எப்படி இருக்கிறது? என்று குசலம் விசாரிக்கின்றனர்.

ஏதோ எங்க ஆத்துக்காரரும் கச்சேரிக்குப் போனார் என்பது போல தொகுதியின் பக்கம் ஸ்பெஷல் விசிட்செய்வதும் என் செவிக்கு எட்டாத செய்திகள் அல்ல.

ஆளுங்கட்சியினர் ஆண்டிப்பட்டிக்கு கனகாபிஷேகம் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், நமது தேர்தல் பணிக்குழுவினர், நாங்கள் மாசற்றவர் எனினும் கையில் காசற்றவர் என்ற பல்லவியை பாடிக்கொண்டிருக்கின்றனர்.

தொலைபேசி மணி அடித்தாலே தூக்கி வாரிப் போடுகிறது. எங்கிருந்து பேசுகிறார்களே, பணம் எதுவும்கேட்பார்களோ என்ற பதட்டத்துடன் தான் பேசத் தொடங்குகிறேன். எதிர்பார்த்தபடியே ஏதாவது கொஞ்சம் பணம்அனுப்ப முடியுமா என்று கெஞ்சுகிறார்கள்.

எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது. தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள வரையறைக்குள் செலவழிக்கக் கூடவழியில்லை, வகையில்லை. இப்படி ஏக்கக் குரல் ஒலிக்கிறது ஆண்டிப்பட்டியிலிருந்து வரும் தொலைபேசிகளில் !

"ஏனய்யா, அந்த எம்.பி. வந்தாரா? இந்த எம்.எல்.ஏ. வந்தாரா? வரவில்லையா? வராவிடினும் ஏதாவது நிதி தரவேண்டும் என்ற நினைப்பு கூட அவர்களுக்கு வரவில்லையா?"

"..........."

"இவர்களுக்கு கட்சி மட்டும் தான் கடமைப்பட்டிருக்க வேண்டுமா?"

".........."

"இவர்கள் தங்கள் கடமையை கருதியும் பார்க்க மாட்டார்களா? இவர்களை உயர்ந்த இடத்தில் உட்கார வைக்கஓடியாடி உயிரையும் கொடுத்து உழைத்திட்ட ஓய்வறியா என் உடன்பிறப்புக்களுக்கு மட்டும் தான் தலையில்எழுதியிருக்கிறதா?"

".........."

மேலே இடையயிடையே புள்ளிகள் வைக்கப்பட்டுள்ளதெல்லாம் தொலைபேசியின் மறுமுனையில் மவுனம் தான்பதில் என்பதைக் குறிப்பிடுபவை ஆகும்.

நமக்காக உழைக்க வேண்டும், நம்மைப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று கழகத்தின் தலையில்எழுதியிருப்பதாக நினைப்பவர்கள், என் வேதனையை இம்மடல் வாயிலாக அறிந்த பிறகாவது, தங்களை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டு, திமுக வேட்பாளர் வெற்றிக்கு உழைத்திடத் தம்மால் ஆனதைச் செய்திடமுனையட்டும்.

இப்போது களத்தில் நின்று கடமையாற்றிடும் கழக முன்னோடிகள், உடன்பிறப்புகள் அனைவருக்கும் என்மனமார்ந்த பாராட்டுக்கள்.

தம்பியுடையான் படைக்கஞ்சான்! இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்? என்ற அறிஞர் அண்ணாவின் வீரமொழி, நமக்கு அழியாச் செல்வமாக, ஆற்றல் வழங்கும் அமுதமாக இருக்கும் வரை நமக்கே வெற்றி! நமக்கேவெற்றி! என பீடுநடை போடுவோம் என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+