மசூதிக்குள் மறைந்திருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் மசூதிக்குள் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆனால், அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து படையினரும் சுட்டனர். இதைத் தொடர்ந்து 3தீவிரவாதிகளும் அருகில் உள்ள மசூதியில் புகுந்து கொண்டனர். அதனால் ராணுவப் படைகளும், எல்லைப்பாதுகாப்புப் படைகளும் விரைந்துச் சென்று அந்த மசூதியை சுற்றி வளைத்தனர்.
மசூதிக்குள் மின் சப்ளையையும், குடிநீர் சப்ளையையும் ராணுவத்தினர் துண்டித்து விட்டு ஆயுதங்களைஒப்படைத்துவிட்டு சரணடையும்படி எச்சரிக்கை விடுத்தனர்.
ஆனால் தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி சுட்டவண்ணம் இருந்தனர். இதையடுத்துராணுவத்தினரும் திருப்பிச் சுட்டனர். இதில் ஒரு தீவிரவாதி இறந்தான்.
மற்ற இருவரையும் சரணடைய வைக்க அந்த மசூதியின் இமாம் (தலைவர்) உள்பட 4 பொதுமக்களை ராணுவஅதிகாரிகள் மசூதிக்குள் அனுப்பினர். ஆனால், இந்த இருவரும் தங்களிடம் பேச்சு நடத்த வந்த அந்த 4 பேரையும்பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர்.
எங்களைத் தப்பிக்க அனுமதித்தால் தான் இவர்களை விடுவிப்போம் என்று தீவிரவாதிகள் கூறினர். ஆனால், இதைஏற்க ராணுவம் மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து இமாமையும் 3 பேரையும் தீவிரவாதிகள் விடுவித்தனர்.
ஆனால், சரணடைய மறுத்தனர்.
இந்நிலையில் சரணடைய சொல்லியும் சரணடையாததால் வேறு வழியில்லாமல் இன்று (சனிக்கிழமை) அதிகாலைமசூதிக்குள் இருந்த 2 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். இவர்கள் 2 பேரும்ஜமாத்-உல்-முஜாஹிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இவர்களின் ஒருவன் பெயர் அபு தன்யால் என்ற அபு ஹம்சா பாபா. இவன் இந்த தீவிரவாத அமைப்பின் ஏரியாகாண்டர். மற்றொருவன் பெயர் ஷபீர் என்ற ரஷீத். இவன் பாகிஸ்தானின் சியால்கோட்டைச் சேர்ந்தவன்.
இந்தத் தாக்குதலின்போது எழுந்த துப்பாக்கிச் சத்தத்தால் பயந்துபோன ஒரு கிராமவாசி மாரடைப்பால் இறந்தார்.மசூதியும் சிறிது சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீவிரவாதிகள் மீதான இத் தாக்குதலை மேஜர் ஜெனரல் தல்வீர் சிங் முன்னின்று நடத்தினார். மசூதிக்கு எந்தத் தீங்கும்நேர்ந்துவிடக் கூடாது என தனது படைகளுக்கு அவர் உத்தரவிட்டிருந்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications