அமெரிக்க நிருபர் விடுதலையா? பாகிஸ்தான் மறுப்பு
கராச்சி:
பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அமெரிக்க பத்திரிக்கை நிருபர் டேனியல் பேர்ல் விடுதலைசெய்யப்பட்டு விட்டதாக வரும் தகவல்கள் தவறானவை என்று பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவர் வெள்ளிக்கிழமை காலையிலேயே விடுதலை செய்யப்பட்டு அமெரிக்க அதிகாரிகளிடம்ஒப்படைக்கப்பட்டதாகவும், அவருக்காக சனிக்கிழமை செல்லும் லண்டன் விமானத்தில் டிக்கெட் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் பத்திரிக்கை ஒன்று தெரிவித்திருந்தது.
இந்த செய்தியை கராச்சி டி.ஐ.ஜி. தாரிக் ஜமீல் மறுத்துள்ளார். மேலும் டேனியல் பெயர் உள்ள வேறு யாராவதுஒருவர் அந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறினார்.
கடத்தலில் பாக். அதிகாரிகளுக்கு தொடர்பு:
இந்தக் கடத்தலில் பாகிஸ்தான் போலீஸ் அதிகாரி சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நேற்று பாகிஸ்தான் அதிபர் முஷரப் சொந்த காரணங்களுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவர்12ம் தேதி தான் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது.
ஆனால் பாஸ்டனில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக அவர் முன்னதாகவே சென்றிருப்பதாக பாகிஸ்தான்அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா சென்றுள்ள முஷரப் அமெரிக்கப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளிக்கையில் கூறியிருப்பதாவது,
அமெரிக்க நிருபர் கடத்தப்பட்டதில் இந்தியாவுக்கு பங்கு இருக்கிறது. ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தஓமர் ஷேக் உதவியுடன் இந்தியா தான் நிருபரைக் கடத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு உலகளவில் கெட்டப் பெயர் உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே இந்தியா இந்த சதித்திட்டத்தில்இறங்கியுள்ளதாக முஷரப் அந்த பத்திரிக்கையில் கூறியுள்ளார்.
தனது நாட்டில் தீவிரவாதிகளை அடக்கி வைக்க முடியாத முஷாரப் அமெரிக்காவிடம் நல்ல பெயர் வாங்குவதற்காகஇந்தப் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக இந்தியா ஏற்கனவே கூறிவிட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications