கேள்வி கேட்டு.. கேள்வி கேட்டு ஸ்டாலின் பிரச்சாரம்
தேனி:
ஜெயலலிதா பாணியிலேயே பொதுமக்களிடம் கேள்வி கேட்டு பதில் சொல்ல வைக்கும் பாணியை ஸ்டாலின்ஆண்டிப்பட்டி பிரச்சாரத்தில் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் கேள்வி கேட்டு பதில் சொல்லவைக்கும் புதிய பிரச்சார முறையை கையாண்டார்.
இந்த பிரச்சார முறை பொதுமக்களின் வரவேற்பை பெற்று, அதிமுக அமோகமாக வெற்றி பெற்றது. தற்போதுஆண்டிப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் ஸ்டாலினும் இதே முறையில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
2 தினங்களுக்கு முன்பு முதல்வர் பன்னீர்செல்வம் பெரியகுளம் யூனியனில் பிரச்சாரம் செய்யும்போது, திமுகஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணிகளும் செய்யவில்லை, எனக்கு பிறகு ஸ்டாலின் இங்கு வரும் போது இந்தபகுதியில் உங்கள் ஆட்சியில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேளுங்கள் என்று கூறினார்.
அந்த பகுதிக்கு ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது முதல்வர் கேள்வி கேட்டது பற்றி அவரிடம்தெரிவிக்கப்பட்டது. பிறகு ஸ்டாலின் பேசும் போது, இந்தப்பகுதியில் சோத்துப்பாறை அணைக்கட்டு யார் காலத்தில்கட்டப்பட்டது?
ரூ.1 கோடி மதிப்பில் வராக நதிப் பாலம் யார் ஆட்சியில் வந்தது? என கூடியிருந்த மக்களைப் பார்த்து கேட்டார்.அதற்கு அங்கு கூடியிருந்த மக்கள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்று கூறினர்.
இந்த தொகுதியில் திமுக வெற்றி பெறுவதன் மூலம் ஆட்சியில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. ஆளுங்கட்சியினர்செய்யும் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். எனவே திமுகவை வெற்றி பெறசெய்யுங்கள் என்றார் ஸ்டாலின்.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications