அதிரடிப்படையினர் அட்டூழியம்: சதாசிவம் கமிஷன் விசாரணை தொடர்ந்து நடக்கும்
சென்னை:
வீரப்பனைத் தேட நியமிக்கப்பட்டுள்ள அதிரடிப்படை வீரர்கள் மலைப் பகுதி மக்களுக்கு செய்த கொடுமைகள் குறித்த புகார்களைவிசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சதாசிவம் கமிஷனின் முதல்கட்ட விசாரணை நேற்றுடன் முடிவடைந்தது.
ஆனால், தொடர்ந்து கமிஷன் விசாரணை நடத்தும் என நீதிபதி சதாசிவம் அறிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், அதிகாரிகள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மிக நீண்டபுகார்களைக் கொடுத்துள்ளனர். அவை அனைத்தும் மிகத் தீவிரமானவை. இவற்றை முழுமையாகவும், விரிவாகவும் விசாரிக்கவேண்டியுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 14 பேரிடம் மட்டுமே வாக்குமூலம் பெற முடிந்தது.
பாதிக்கப்பட்டவர்களை மொத்தமாக வரவழைத்து இந்த வாக்குமூலத்தைப் பெற முடியாது. காரணம், ஒவ்வொருவரும் தனிப்பட்டமுறையில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சம்பவங்கள் நடந்தது 1992ல். ஆனால் அப்போது பணியில் இருந்த பல காவல்துறை அதிகாரிகள் இப்போது ஓய்வு பெற்று விட்டனர்.எனவே பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலத்தை முழுவதுமாக பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மறுபடியும் கமிஷன் விசாரணை நடத்தும் வாய்ப்பு உள்ளது. இதற்காக தேசிய மனித உரிமை ஆணையத்துக்குக் கோரிக்கை விடுத்துக் கடிதம்எழுதுவேன் என்றார் அவர்.
இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களாக நடந்து வந்த சதாசிவம் கமிஷனின் விசாரணை வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது. இந்தமூன்று நாட்களிலும் அதிரடிப்படை வீரர்கள், அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது சோகக் கதைகளை கண்ணீருடன் கமிஷன் முன்தெரிவித்தனர்.
இவற்றில் பெரும்பாலானவை கற்பழிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications