தலிபான் வெளியுறவு அமைச்சர் அமெரிக்காவிடம் சரண்

Subscribe to Oneindia Tamil

காண்டஹார்:

தலிபான் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து முல்லா அப்துல்வகீல் முட்டாவகீல் அமெரிக்கராணுவத்திடம் சரணடைந்தார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகு முல்லா ஒமரும், பின் லேடனும் சக தலைவர்கள்,அமைச்சர்களுடன் ஓடி ஒளிந்துவிட்டனர்.

அமெரிக்க விமானத் தாக்குதலில் பல தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். ஆனால், தலிபான் அமைச்சர்கள்பலரும் தலைமறைவாகவே இருந்து வருகின்றனர். இந் நிலையில் தலிபான் ஆட்சியின் வெளியுறவுத்துறைஅமைச்சரான முட்டாவகீல் சரணடைந்துள்ளார்.

கண்டஹார் அருகே அமெரிக்கப் படைகளிடம் அவராகவே வந்து சரணடைந்துள்ளார்.

தலிபான் கும்பலிலேயே கொஞ்சம் ஆங்கில அறிவும், வெளியுலக அறிவும் உடையவர் இவர். முல்லா ஒமருக்கு மிகநெருக்கமானவராக இருந்தார். இந்திய விமானம் காண்டஹாருக்குக் கடத்திச் செல்லப்பட்டபோது வெளியுறவுத்துஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் அங்கு சென்றபோது அவரைச் சந்தித்த ஒரே தலிபான் தலைவர் முட்டாவகீல் தான்.

அமெரிக்க ராணுவத்திடம் சரணடைந்துள்ள மூத்த தலிபான் தலைவர் இவர் ஒருவர் தான். இவரை நேற்றிரவும்முழுவதும் தங்கள் வசம் ராணுவ முகாமில் வைத்திருந்த வீரர்கள் இன்று காலை காண்டஹார் விமான நிலையத்தில்உள்ள தங்கள் முகாமுக்குக் கொண்டு சென்றனர்.

அவரிடம் தலிபான்கள் குறித்தும், முல்லா ஒமர், பின்லேடன் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் நேற்று முழுவதும் அமெரிக்க விமானங்கள் திடீர் திடீர் என ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில்மலைகள் மீது குண்டுகளை வீசித் தாக்கின. இதுவரை நடத்தப்பட்ட பயங்கரமான குண்டு வீச்சுத் தாக்குதல் இது தான்என பென்டகன் கூறியுள்ளது.

அல்-கொய்தா தீவிரவாதிகள் குழுவினர் அந்த மலைப் பகுதியில் பதுங்கியிருந்ததால் இத் தாக்குதல்நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதில் பலர் கொல்லப்பட்டார்.

மேலும் ஆளில்லா விமானமான ட்ரோன் கண்காணிப்பு விமானமும் இந்த மலைப் பகுதியில் கண்காணிப்பில்ஈடுபட்டது. அப்போது தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் இந்த விமானம் கண்டுபிடித்தது. இதையடுத்து இந்தவிமானமும் சில குண்டுகளை வீசியது. இதில் ஒரு சில தீவிரவாதிகள் இறந்தனர். இந்த விமானத்தை சி.ஐ.ஏ.அதிகாரிகள் காபூலில் இருந்தவண்ணம் தரைக்கட்டுப்பாடு மூலம் இயக்கி, குண்டுகளையும் வீசினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+