கேப்டனை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் தற்கொலை
சிலிகுரி:
சிலிகுரி அருகே ராணுவப் பயிற்சி முகாமில் ராணுவ வீரர் ஒருவர் கேப்டனை சுட்டுக் கொன்றுவிட்டு தானும்தற்கொலை செய்து கொண்டார்.
மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி அருகே பக்டோக்ரா அருகே சிறப்பு ராணுவத்தின் 7வது விகாஸ் ரெஜிமெண்ட்அலுவலகம் உள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அந்த அலுவலகத்தில் ராணுவ கேப்டன்கள் எஸ். ஸ்ரீனிபாஷும்,குர்தீப் சிங்கும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த ஷெரிங் நாபு என்ற ராணுவ வீரர் ஏகே-47 ரக துப்பாக்கியால் திடீரென்று ஸ்ரீநிபாஷையும்குர்தீப் சிங்கையும் சுட்டார். பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த தாக்குதலில் நெற்றியில் குண்டு பாய்ந்த கேப்டன் ஸ்ரீனிபாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வயிற்றில்குண்டு பாய்ந்த குர்தீப் சிங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவரதுஉடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் பற்றி ராணுவ அதிகாரிகளிடம் கேட்டதற்கு, தேச நலன் கருதி காரணத்தைக் கூறமுடியாது என்று மறுத்து விட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications