கோவையில் போலி சாமியாரின் பலே திருட்டு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூருக்கு அருகே மாங்கல்ய பூஜை செய்வதாகக் கூறிய போலிச் சாமியார் ரூ.50,000 மதிப்புள்ளநகைகளைத் திருடிக் கொண்டு தப்பினார்.
கோயம்புத்தூர் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தா. இவரது வீட்டுக்கு கடந்த சனிக்கிழமை ஒருசாமியார் வந்துள்ளார்.
வசந்தாவிடம் உங்களுக்கு தாலி தோஷம் உள்ளது. எனவே அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும் என்றுகூறியுள்ளார். ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள வசந்தா இதைக் கேட்டு பயந்து போனார். பரிகாரத்தை செய்யுமாறுசாமியாரிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து வீட்டிலுள்ள நகைகள் அனைத்தையும் கொண்டு வருமாறு வசந்தா மற்றும் அவரது மகளிடம் சாமியார்கூறியுள்ளார். அவர்களும் அதன்படியே சுமார் 15 பவுன் நகைகளைக் கொண்டு வந்து சாமியாரிடம்கொடுத்துள்ளனர்.
அதன் பிறகு நீங்கள் இருவரும் புதிதாக டிரஸ் செய்து கொண்டு வாருங்கள், பூஜையை ஆரம்பிக்கலாம் என்றுகூறியுள்ளார் சாமியார். அவர்களும் யோசிக்காமல் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்து பார்த்தால் அங்கு சாமியாரும் இல்லை, அவர்கள் கொடுத்த நகைகளையும்காணவில்லை.
இதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. நகைகளை அபேஸ் செய்து கொண்டு தப்பியபலே சாமியாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications