கருணாநிதிக்கு விருந்தில்லம் மறுப்பா? - வாசன் ஆவேசம்
புதுக்கோட்டை:
திமுக தலைவர் கருணாநிதி தங்குவதற்காகப் பதிவு செய்யப்பட்ட திண்டுக்கல் விருந்தினர் மாளிகை அறை தமிழகஅரசால் ரத்து செய்யப்பட்டதற்கு தமாகா தலைவர் வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமாகா செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட வாசன் பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் கருணாநிதி தங்குவதற்காகப் பதிவு செய்யப்பட்டதிண்டுக்கல்-குடகனாறு விருந்தினர் மாளிகை அறையை பின்னர் பொதுப்பணித் துறை அதிகாரிகள் ரத்து செய்துவிட்டனர்.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டனத்துக்குரியது. தமாகாவும் இதை வன்மையாகக் கண்டிக்கிறதுஎன்றார் வாசன்.
முன்னதாகத் தமாகாவின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வாசன், இயக்கமும் பொதுவாழ்க்கையும் நமக்கு 2 கண்கள் போன்றவை என்று கூறினார்.
பொதுமக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அக்கறை வேண்டும் என்று தமாகா தொண்டர்களிடம் கேட்டுக்கொண்ட வாசன், அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications