ஆண்டிப்பட்டி தேர்தல் பணியில் 1,000 ரிசர்வ் போலீசார்: டி.ஜி.பி.
சென்னை:
ஆண்டிப்பட்டியில் இடைத் தேர்தலுக்காக 1,000 மத்திய ரிசர்வ் போலீசார் உள்பட 3,000 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் கூறினார்.
இதுகுறித்து நெய்ல்வால் நேற்று (திங்கள்கிழமை) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இடைத் தேர்தலையொட்டி ஆண்டிப்பட்டியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3,000போலீசார் குவிக்கப்படுவார்கள்.
இதில் தமிழக போலீசார் மட்டுமே 2,000 பேர் இருப்பர். இது தவிர மத்திய ரிசர்வ் படை போலீசார் 1,000 பேர்ஈடுபடுத்தப்பட உளளனர்.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா 2 போலீசார் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள்.
வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை எடுத்துச் செல்லும்போது போலீசார் பாதுகாப்பாகசெல்வார்கள். வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணும் இடத்திற்கு செல்லும் போதும் போலீஸ் பாதுகாப்புபலமாக இருக்கும்.
இதற்காக 17 ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆண்டிப்பட்டி தொகுதியில் 50 வாக்குச் சாவடிகள் உள்ள பகுதிகள் பதட்டம் நிறைந்தவையாக இருக்கும் என்றுகண்டறியப்பட்டுள்ளது. எனவே அந்த 50 வாக்குச் சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு இருக்கும்.
இந்த வாக்குச் சாவடிகள் ஒவ்வொன்றிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 5 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பாகஇருப்பார்கள்.
அதிரடிப்படை போலீசார் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணியில் இருப்பார்கள் என்று நெய்வால் கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications