அமெரிக்காவை தாக்க தீவிரவாதிகள் சதி: எப்.பி.ஐ.
நியூயார்க்:
ஏமனைச் சேர்ந்த ஒரு தீவிரவாதியும் அவனுடைய கூட்டாளிகளும் அமெரிக்காவில் பெரும் தாக்குதல் நடத்தத்திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான பெடரல் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேசன் (எப்.பி.ஐ.)எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்டு, கியூபா சிறைகளில் அடைக்கப்படுவதற்காகக் கொண்டு வரப்பட்டஅல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளும் இந்தத் தாக்குதல் குறித்த தகவல்களைக் கூறியதாகவும் எப்.பி.ஐ.கூறியுள்ளது.
இந்தப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது, ஏமனில் உள்ள அமெரிக்க நிலைகள்மீது இன்று(பிப்.12, திங்கள்கிழமை) முதற்கட்டத் தாக்குதல் நடக்கும் என்று தெரிகிறது என்றும் எப்.பி.ஐ. தெரிவித்தது.
சவூதி அரேபியாவில் பிறந்து பின்னர் ஏமனில் குடியேறிய 23 வயதே நிரம்பிய பாவாஸ் வாஹ்யா அல்-ரபீய் என்றஇளைஞன் தலைமையிலான 13 பேர் இந்தத் தாக்குதல்களில் ஈடுபடலாம் என்று எப்.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பல எச்சரிக்கைகளை அமெரிக்கா வெளியிட்டுள்ள போதிலும், இந்தத்தாக்குதல் எச்சரிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
எப்.பி.ஐயும் இந்தத் தாக்குதல் குறித்த எச்சரிக்கையை படு சீரியசாகவே வெளியிட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்கா, ஏமன் மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்து அமெரிக்க நிலைகளிலும் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications