இந்தியா அணுகுண்டு சோதனை முயற்சியா? - முஷாரப் புகாருக்கு அமெரிக்கா மறுப்பு
வாஷிங்டன்:
இந்தியா விரைவில் அணுகுண்டு பரிசோதனை செய்யப் போவதாக அறிகுறிகள் தென்படுகின்றன என்றுபாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பின் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்து விட்டது.
இந்தியா விரைவில் அணுகுண்டு பரிசோதனையும் செய்யவுள்ளது என்பதற்கான அறிகுறிதான் இந்த ஏவுகணைச்சோதனை என்றும் முஷாரப் கூறினார்.
ஆனால் ஒரு கூட்டத்தில் பேசும்போது பொதுவாக இதுகுறித்து முஷாரப் கூறினாரே தவிர, அமெரிக்கதலைவர்களிடம் இதுகுறித்து அவரால் விரிவாக எதையும் பேச முடியவில்லை. இதையடுத்து முஷாரப்பின் இந்தக்குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்து விட்டது.
முஷாரப்பின் குற்றச்சாட்டில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று கூறிய அமெரிக்கா, இந்தியாவோபாகிஸ்தானோ இனி அணுகுண்டு சோதனை நடத்தாது என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் முஷாரப்பின் குற்றச்சாட்டை 2வது முறையாக அமெரிக்கா வன்மையாக மறுத்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் "வால் ஸ்ட்ரீட்" பத்திரிக்கையின் நிருபர் டேனியல் பேர்ல் கராச்சியில் கடத்தப்பட்ட சம்பவத்தில்இந்தியாவுக்குத் தொடர்பு உண்டு என்று முஷாரப் கூறியிருந்தார்.
ஆனால் எந்தவிதமான ஆதாரமும் இல்லாமல் முஷாரப் கூறிய இந்தக் குற்றச்சாட்டால் எரிச்சலடைந்த அமெரிக்கா,இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று கூறிவிட்டது.
இப்போது இந்திய அணுகுண்டு சோதனை நடத்தவுள்ளது என்று அமெரிக்காவில் வைத்தே முஷாரப் கூறியதையும்நம்பத் தயாராக இல்லை என்று கூறி அமெரிக்கா மறுத்து விட்டது.
இந்தியாவும் மறுப்பு:
இதற்கிடையே முஷாரப்பின் குற்றச்சாட்டை இந்தியாவும் மறுத்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறைசெய்தித் தொடர்பாளரான நிருபமா ராவ் கூறியதாவது:
சமீபகாலமாகவே பாகிஸ்தான் தன்னுடைய "பட்டம் பறக்க விடும்" வேலையைக் காட்டிக் கொண்டே இருக்கிறது.
தன்னிடமே பல குற்றங்களையும் சுமந்து கொண்டு தவிக்கும் பாகிஸ்தான், இந்தியா மீது பல்வேறுகுற்றச்சாட்டுகளையும் சுமத்தி வருகிறது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய்யானவை, தவறானவை. எனவே பாகிஸ்தானின் இந்தக்குற்றச்சாட்டை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம் என்று நிருபமா ராவ் கூறினார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications