திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்த ஜெ.
தேனி:
ஆண்டிப்பட்டியில் எப்போதும் இல்லாத வகையில் ஜெயலலிதா திறந்த ஜீப்பில் பிரச்சாரம் செய்தார்.
கடந்த சில ஆண்டுகளாக் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஜெயலலிதா வேனில் இருந்துஇறங்காமல், வேனில் இருந்தபடியே பேசுவார். பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடங்களில் மட்டுமேஇறங்கி மேடைக்கு செல்வார்.
ஆனால் இந்த முறை முதல் பிரச்சாரக் கூட்டத்திலேயே வேனை விட்டு கீழே இறங்கி, திறந்த ஜீப்பில் ஏறி பேசினார்.
ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தை புதன்கிழமை கண்டமனூர் என்ற இடத்தில் இருந்து தொடங்கினார். இவர்வருவதற்கு முன் அந்த இடங்களில் தினகரன் பெயரை பெரிதாக எழுதி விளம்பரப்படுத்தியிருந்ததை,அதிமுகவினர் சிலர் ஜீப்பில் வந்து அழித்தனர்.
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் ஜெயலலிதாவிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது அவர் மாலையைத் தொட்டுக் கொடுக்க அவருடன் வந்திருந்த அமைச்சர் நயினார்நாகேந்திரன் மாலையை அணிவித்தார்.
தேர்தல் கமிஷன் விதிமுறைகளை பின்பற்றும் வகையில் மிக குறைந்த எண்ணிக்கையிலான கார்கள் பின்தொடரஜெயலலிதா வந்தார். கட்சி நிர்வாகிகள் யாரும் பின் தொடர வேண்டாம் என்று அன்புக் கட்டளைஇடப்பட்டிருந்தது.
இதையும் மீறி தொடர்ந்த சிலரை போலீசார் பிடித்து திருப்பி அனுப்பினர். கூடியிருந்த பொதுமக்கள்ஜெயலலிதாவின் வேன் வரை சென்று மனுக்களை கொடுத்தனர்.
ஜெயலலிதா பேசிய இடங்களில் பூரணகும்பம், மேளதாளம், கரகாட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவுடன் வந்த பாதுகாப்புப் படையினரும், போலீசாரும் கெடுபிடி எதுவும் செய்யாமல் அடக்கமாகநடந்து கொண்டனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications