ஒரே ஜீப்பில் அழகிரி-ஸ்டாலின்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் கருணாநிதியின் மகன்களான அழகிரியும் ஸ்டாலினும் ஒரே ஜீப்பில் நின்று கொண்டுஇன்று (வியாழக்கிழமை) பிரச்சாரம் செய்தனர்.
சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலினும் மதுரை மாநகரின் முக்கியப் புள்ளியான மு.க. அழகிரியும்ஆண்டிப்பட்டி தொகுதி வேட்பாளரான வைகை சேகரை ஆதரித்து இதுவரை தனித்தனியாகவே பிரச்சாரம் செய்துவந்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவருக்கும் மோதல் என்று சில பத்திரிக்கைகள் பெரிதாக எழுதின. இதை வன்மையாகமறுத்த கருணாநிதி, இதுகுறித்து நேற்று பெரிய அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.
இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் 2வது கட்டப் பிரச்சாரத்திற்காக நேற்று காலை மதுரை சென்று சேர்ந்த ஸ்டாலின்,அழகிரியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று தன்னுடைய மகன் உதயநிதியின் திருமணத்திற்கான அழைப்பிதழைஅவரிடம் கொடுத்தார்.
மேலும் அவர்கள் 2 பேரும் சுமார் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் ஸ்டாலின் காலையிலும்அழகிரி மாலையிலும் பிரச்சாரத்திற்காக ஆண்டிப்பட்டிக்குக் கிளம்பிச் சென்றனர்.
இந்நிலையில் ஆண்டிப்பட்டியில் இன்று அழகிரியும் ஸ்டாலினும் ஒரே ஜீப்பில் நின்றுகொண்டு பிரச்சாரம்மேற்கொண்டனர்.
இவர்களுடைய இந்த ஒற்றுமையைக் கண்டு திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். அதோடுஅவர்களைச் சுறுசுறுப்பும் தொற்றிக் கொண்டது.
இந்த மகிழ்ச்சியுடன் திமுக தொண்டர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் அதிதீவிரமாக ஈடுபட்டனர்.
அழகிரியும் ஸ்டாலினும் திறந்த ஜீப்பில் அருகருகே நின்று கொண்டு பொதுமக்களிடம் ஓட்டுக் கேட்டதைக் கண்டஅத்தொகுதியின் வேட்பாளரான வைகை சேகரும் மிகவும் நெகிழ்ந்து போனார்.
மேலும் அதே சந்தோஷத்துடன் பிரச்சாரத்திற்காக நாளை மதுரை வந்து சேரும் தங்கள் தலைவர்கருணாநிதியை வரவேற்கவும் திமுக தொண்டர்கள் தயாராகி விட்டனர்.


Click it and Unblock the Notifications
